திருப்பத்தூர் நகராட்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 4 கவுன்சிலர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
திருப்பத்தூர் நகராட்சி அவசர கூட்டம் அதன் தலைவர் அரசு தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. துணைத்தலைவர் செல்வி பூபதி, ஆணையாளர் சர்தார், பொறியாளர் ராமகிருஷ்ணன் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது கவுன்சிலர்கள் வி.சரவணன் (அதிமுக), முகமதுதாஜ் (அதிமுக), எஸ்.பூபதி(அதிமுக), நெடுமாறன்(காங்கிரஸ்) ஆகிய 4 பேரும் தங்கள் வார்டு பகுதியில் மேற்கொள்ளவேண்டிய அடிப்படை வசதி, குடிநீர் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து தெரிவித்தனர்.
மேலும் பலமுறை இதுகுறித்து கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். விடிய விடிய உள்ளிருப்பு போராட்டம் நடத்திய அவர்கள், தொடர்ந்து 2வது நாளாக நேற்றும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கவுன்சிலர்கள் கூறுகையில், எங்களின் பிரச்னைகளுக்கு இன்று
(நேற்று) மாலைக்குள் நகராட்சி அதிகாரிகள், விரைந்து நடவடிக்கை எடுப்பதாக ஒப்புதல் அளிக்காவிட்டால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.
இதனிடையில் பிற்பகல் 2 மணியளவில் நகராட்சி தலைவர், ஆணையாளர் மற்றும் பொறியாளர் ஆகியோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
விரைவில் உங்கள் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்Õ என உறுதி அளித்ததின் பேரில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
More Tirupattur News Please Like this page https://www.facebook.com/Thetirupattur