மலைகளின் இளவரசி என்றும், ஏழைகளின் ஊட்டி என்றும் சுற்றுலா பயணிகளால் வர்ணிக்கப்படும் ஏலகிரி மலையில் வரும் 8, 9ம் தேதிகளில் கோடை விழா கோலாகலமாக நடைபெற உள்ளது.
மாவட்ட கலெக்டர் வழிகாட்டுதலின் பேரில் விழா ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
முதல் நாள் 8ம் தேதி தொடக்க விழாவும் 9ம் தேதி நிறைவு விழாவும் நடக்கிறது.
மராத்தான் ஓட்டம், சைக்கிள் போட்டிகளுக்கு பின்னர் கோடை விழா ஆரம்பமாகும்.
விழாவில் மதுரை வாடிப்பட்டி இசைக்கலைஞர்களின் இசை, நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
வேலூர் மாவட்டத்தின் பாரம்பரிய கெக்கேலிக்கட்டை ஆட்டம், சிலம்பாட்டம் மற்றும் மலைவாழ் மக்களின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் மலர் கண்காட்சி, நாய் கண்காட்சி கைப்பந்தாட்டம், பூப்பந்தாட்டம், கபடி, படகு போட்டிகள் நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு நடைபெறும் கோடை விழா மற்ற ஆண்டுகளை விட சிறப்பாக அமைய உள்ளது.
இதில் 3 அமைச்சர்கள் பங்கேற்று அரசின் பல்வேறு நல திட்ட உதவிகள் வழங்க உள்ளனர்.
மொத்தத்தில் கோடை விழா ஒரு குதூகல விழாவாக உருவாகிறது. தஞ்சை மாட்ட தென்னங்கீற்று கை வினைகலைஞர்களால் செய்யப்பட்டுள்ள அழகு மிக்க பந்தல் அனைவரையும் கவரும்.