ஏலகிரி கோடை விழா நாளை(சனிக்கிழமை) தொடங்குகிறது. இதில் 3 அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள்.
கோடை விழா
வேலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய சுற்றுலா தலமாக கருதப்படும் ஏலகிரி மலையில் ஒவ்வொரு ஆண்டும் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கோடை விழா நாளை தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.
நாளை (சனிக்கிழமை) காலை 10.30 மணி நிகழ்ச்சி தொடங்குகிறது. கலெக்டர் சங்கர் தலைமை தாங்குகிறார். சுற்றுலாத்துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன் குத்து விளக்கேற்றி கோடை விழாவை தொடங்கி வைக்கிறார்.
Click here for More Yelagiri Summer Festival Photos
கண்காட்சி
அரசின் பல்வேறு துறை விளக்க கண்காட்சியை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் முகம்மது ஜான் தொடங்கி வைக்கிறார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கே.சி. வீரமணி மகளிர் சுய உதவிக்குழுக்களின் தயாரிப்பு பொருட்கள் விற்பனை கண்காட்சியை திறந்து வைக்கிறார்.
கோடை விழாவையொட்டி பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது. கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு 9–ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) 4 மணிக்கு நடக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தூர்பாண்டியன் பரிசுகளை வழங்குகிறார்.
சிறந்த அரங்குகள் அமைத்தவர்களுக்கு அமைச்சர் முகம்மது ஜான் பரிசுகள் வழங்குகிறார். அதனை தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.சி. வீரமணி வழங்குகிறார்.
சிறப்பு பஸ்கள் இயக்கம்
கோடை விழாவை காண வரும் பொது மக்களின் வசதிக்காக ஜோலார்பேட்டை பகுதியில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.